Friday, November 25, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (3) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர் ~ விடுதலை

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (3) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்
பட்டுக்கோட்டையிலுள்ளவர்களுக்கு இவைகளை யெல்லாம் பற்றி அவ்வளவு கவலை இல்லாமலிருக்கலாம். காவிரியிலோ அமராவதியிலோ அல்லது பவானியிலோ அல்லது வேறு எங்கேயோ அதிக ஜலம் தேக்கி வைத்து, பட்டுக்கோட்டை முதலிய இடங்களுக்கு ஜலம் வரும்படி ஏற்பாடு செய்ய உத்தேசித்திருக்கும் காவிரி ப்ராஜெக்ட்டைப் பற்றித்தான் அவர்கள் அதிகம் கவனிப்பார்கள்.

இப்பொழுது இருக்கும் பாசன வடிகால் ஏற்பாடுகளை திருத்தம் செய்து கொண்டால் காவிரி ப்ராஜெக்ட் கைகூடினாலும் அதிக பலனடையலா மல்லவா? மேலும், காவிரி பாசன விஷயமாய் மைஸூர் கவர்ன்மெண்டார் மதராஸ் கவர்ன் மெண்டை விட முன்னாலே விழித்துக் கொண்டு விட்டார்கள். மைஸூர் பாசன ஸ்கீம் வந்துவிட்டால் பட்டுக் கோட்டைக்கு வரும் காவேரி ஜலம் குறைவடைந்து விடுமாதலால், இப்பொழுது வரும் ஜலத்தை, சீர்திருத்திய வாய்க்கால் மூலமாகவும், வடிகால் மூலமாகவும், ஒழுங்குபடுத்தி செட்டாய் பாய்ச்ச வேண்டிவரும் என்பது நன்றாய் விளங்குகிறது.

இரிகேஷன் கமிஷன் ரிப்போர்ட் டின்படி காவேரி நீராரம்ப பாசன வேலைகளுக்குப் போட்ட மூலதனத் துக்கு நல்ல லாபம் வருகிறது. 1900-_01 ஆம் வருஷம் முடியும் அய்ந்து வருஷங் களில் ஸராஸரி ஒவ்வொரு வருஷத்து க்கும் காவேரியின் பாசன நிலங்களில் வந்த ரிவின்யூ ரூபா 42,31,000. ஆனால் இதில் 32,91,000 ரூபா பழைய பாசனத் தினால் வரும் வரும்படி போக பாக்கி யுள்ளது ஸர்க்காரால் செய்யப்பட்ட பாசன வேலைகளின் பயனாகும்.

இந்த பாக்கியானது ஜலத்தை ஸரிவரப் பிரித்துக் கொடுப்பதற்கு போட்ட ஸ்வல்ப முதலுக்கு நூற்றுக்கு முப்பத்தேழு விகிதம் வட்டி கட்டுகிறது. கீழ்க்கொள்ளிட பாசனத்தால் வந்த வரும்படி ரூ 4,26,000. இதில் 1,50,000 ரூபா பழைய பாசனத்தால் வந்த ரிவின்யூவாகும். புது ரிவின்யூ போட்ட முதலுக்கு 100_-க்கு 25 வீதம் வட்டி கட்டி வருகிறது. இப்படி நூற்றுக்கு 37_ம், 25_ம், வட்டி கட்டும் துறைகளில் பணம் போடுவது மிகவும் இன்பகரமானதே. ஆனால் கவர்ன்மெண்டார் இப்பொ ழுது வியாபாரம் செய்யும் கம்பெனி யாயில்லை. அப்படியே கம்பெனியா யிருந்தாலும், வியாபார முறையில் இப்பொழுது நல்ல வரும்படி வரும் வேலைகளை இன்னும் நல்ல ஸ்திதியில் வைத்திருப்பது இன்னும் அந்த வ்யாபாரத்துக்கு ஒத்ததாகவே யிருக்கும். இந்த ராஜதானியில் உள்ள பாசன ஏற்பாடுகளின் நிர்வாகச் செலவுகளில் காவேரிப் பாசன நிர்வாகச் செலவுதான் மிகவும் குறைவானது என்று தெரிய வருகிறது. கணக்குகள் பின் வருமாறு:

பாசன ஏற்பாடுகள்:-

பத்து வருஷத் துக்கு ஸராஸரி பாசன நிலத்தில் ஒரு ஏகர் நிர்வகிக்கச் செலவு

கோதாவரி நீராரம்பம் 5.37 அணா
கிருஷ்ணா நீராரம்பம் 6.51 அணா
பெண்ணையாற்றுப் பாய்ச்சல் 5.58 அணா
பெரியாறு 9.84 அணா
ஸ்ரீவைகுண்டம் 5.00 அணா
காவேரி நீராரம்பம் 1.80 அணா

ராஜதானியில் உள்ள மற்ற பாசன ஏற்பாடுகளை உத்தேசித்து காவேரி நீராரம்பத்தை ஸரியாக வைத்துக் கொள்ளப் பணம் ஸ்வல்பமாகச் செலவழிக்கப்படுகிறது. அதோடு கூட ஜலத்தைப் பங்கிடுவதற்கும் மேம் பார்வையிடுவதற்கும், தக்க ஸிப்பந் திகளும் ஏற்படுத்தப் படவில்லை.

பட்டுக்கோட்டையில் நீராரம்பமில்லாத இடங்களில் பாசன ஏரிகள் நல்ல ஸ்திதியிலில்லை என்பது தெரிந்த விஷயமே. ஏரிகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும். நீராரம்ப பாசனவேலைகள் தக்க மேம்பார்வை யுடனிருக்க வேண்டும். அவைகள் விஷயத்தில் இன் னும் அதிகப் பணம் செலவழிக்க வேண்டும்.

இரிகேஷன் கமிஷன் ரிபோர்டில் எழுதியிருக்கிறார்கள்:-

புதியவையான பாசன வேலைகள் ஆரம்பிக்க தகுந்த இடங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே இருப்பவைகளை அதிகப் படுத்தவாவது, சீர்திருத்தவாவது அதிகப் பணம் செலவழிக்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஹேதுவுண்டு. இது விஷயமாய் ஏற்படும் செலவை பாசன வேலைகளின் மூலதனச் செலவாக எண்ணினாலும் அநேகமாய் தக்க வட்டி கட்டுமென்பதில் ஸந்தேக மில்லை என்று எழுதியிருக்கிறார்கள். கமிஷன் மெம்பர்களும் லாபம் வரத்தக்க வேலைகளில் அதிகப் பணம் செலவழிக்கலாமென்று சொல்லி யிருக்கிறார்கள்.

இந்த ராஜதானியில் கவர்ன் மெண்டார் பாசன வேலைகள் செய் வதில் ரொம்பவும் மெதுவாயிருக் கிறார்கள். காவேரி நீராரம்ப விஷயத் தில் பாசன வேலைகளுக்கு பணம் கொடுப்பதாயிருந்தாலும் வேலை யாட்கள் அகப்படுவது அரிதாயிருக் கிறது என்று எப்பொழுதும் சொல்லி வருகிறார்கள். ஸரியான கூலி கொடுத் தால் இந்தியாவில் வேலையாட்கள் கிடைப்பார்கள்.

தஞ்சாவூர் ஜில்லா விலிருந்து பர்மா, லங்கை, ஸ்ட்ரெய்ட் ஸெட்டில்மெண்டுகள் இவைகளுக்கு வேலையாட்கள் குடியேறிப் போகி றார்கள். ஸரியான கூலி கொடுத்தால் வேலையாட்களை தஞ்சாவூரிலேயே இருக்கும்படி செய்துவிடலாம். கூலி வித்யாஸப்படுவதால் தான் கூலி யாட்கள் ஊர்விட்டூர் போகிறார்கள்.

தஞ்சாவூர் பாசனம் ஏற்பாட்டில் சீர்தி ருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு வேலையாட்கள் வேறு நாடுகளுக்குப் போகிறார்கள் என்றும், அதை நிறுத்த ஏதாவது செய்து ஜில்லாவில் ஜனத்தொகை குறைவதைத் தடுக்க வேண்டுமென்றும், கூச்சல்பாடு உண்டாகியிருக்கிறது. இந்த இரண்டு குறைகளையும் ஒரே வழியில் நிவர்த்தி செய்யலாம். பாசன ஏற்பாடுகளை சீர் திருத்த வேலை தொடங்கி வேலை யாட்களுக்கு தக்க கூலி கொடுக்க வேண்டும்.

பாசன வேலைக்கு வேண்டிய மூலதனமும் வேலையாட்களையும் தவிர, பாசன சீர்திருத்த ஏற்பாட்டில் இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. நீராரம்பங்களில் பாசன வேலைகளை சீர்திருத்த வேண்டு மானால் டெல்டாவிலுள்ள ஜனங் களையும் கலந்து யோசனை செய்ய வேண்டும்.

அவர்கள் நாளது வரையில் அந்தப் பாசன விஷயத்தில் அவரவருக்குத் தக்கபடி ஒருவகை பாத்யத்தை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நஷ்டமுண்டாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து முடிக்க கவர்ன்மெண்டார் தக்க ஏற்பாட்டுடன் ஆரம்பிக்க வேண்டும். அதனோடு ஜனங்களுடைய அபிப் ராயத்தையும் அறிந்து அதை அனுஸரித்து சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.

கான்பரென்ஸில் அக்ராஸனாதிபதி பேசிய பிறகு பின்வரும் தீர்மானங்கள் செய்யப்பட்டன.

1. காலஞ்சென்ற மிஸ்டர் ஹியூம், ஆர்.ரகுநாதராவ், வி.க்ருஷ்ணஸாமி அய்யர், இவர்களுடைய மரணத்துக்காக அனுதாபங்காட்டித் தீர்மானங்கள் செய்யப்பட்டன.

2. ஆனரபில் மிஸ்டர் பி.எஸ்.சிவஸ் வாமி அய்யர் நிர்வாக ஸபையில் மெம்பராக நியமிக்கப்பட்டதைப் பற்றி ஸந்தோஷங்காட்டி ஒரு தீர்மானம் செய்யப்பட்டது.

(தொடரும்)
~ விடுதலை

No comments:

Post a Comment