Sunday, November 27, 2011

கருப்பு சிகப்பு இதழியல் நூல் குறித்து மீண்டும் கவிக்கொண்டல் இதழ்...

முனைவர் இரா.பாவேந்தன் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
”அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்க இதழியலின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்தும் வகையில் கறுப்பு சிகப்பு இதழியல் என்ற தலைப்பிலான தொகுப்பு நூலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.இத் தொகுப்பில் கழகக்குரல் ஏட்டில்(1976) ஆம் ஆண்டு தாங்கள் எழுதிய “குற்றம் செய்யத் தூண்டுகிறாதா குமுதம் என்ற தலைப்பிலான் கட்டுரையை இணைக்க விரும்புகின்றேன். இதற்கு ஒப்புதல் வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்”
என கேட்டு மடல் எழுதியிருந்தார்.நானும் உடன் அதற்கு ஒப்புதல் வழங்கினேன்.அத் தொகுப்பு நூல் வெளிவந்த்தும் அவர் எனக்கு அதனை அனுப்பிவைத்தார்.அதில் எனது மூன்று கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.மா.செங்குட்டுவன் என்னும் பெயரில் இரண்டு கட்டுரைகளும் சேனா என்னும் புனைப்பெயரில் நான் எழுதிய கட்டுரை ஒன்றும் அதில் சேர்க்கப்பட்டுருந்தன.1.ஏடுகள் வளர்த்த் இயக்கம்,2.குற்றம் செய்யத்தூண்டுகிறாதா குமுதம்,3.சிரிப்பு தான் வருகுதையா !பலே பாண்டியா என்பவையே அவை.
அந்தக் கட்டுரைகளைப் படித்த போது இப்போதும் அக்கட்டுரைகள் மிகப் பொருத்த்மாகவே இருக்கக் கண்டேன் (இத் தொகுப்பு நூல் பற்றிய் மதிப்புரை பின்னர் வரும்)

சேனா எனப் புனைபெயரில் நான் எழுதிய கட்டுரையைப் படித்துப் பார்த்தால் கம்யூனிஸ்டுத் தோழர் தா.பாண்டியன் அன்று முதல் இன்று வரை கிஞ்சிற்றும் தமது இயல்பினின்று மாறவில்லை என்பது புரியும் அக் கட்டுரை தான் அடுத்தப் பக்கத்தில் வெளியாகியுள்ளது(13-16) அக் கட்டுரையைப் படித்து பாருங்கள்...(மா.செ)
(மா.செங்குட்டுவன் திராவிட இயக்க மூத்த இதழியலாளர்,சென்னையில் வசிப்பவர்)>

நன்றி:மீண்டும் கவிக்கொண்டல் இதழ் நவம்பர் 2011 பக் 12)

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (4) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர் ~ விடுதலை

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (4) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர் ~ 3. சிற்றாறுகளிலுள்ள மதகுகள் போன்ற அநேக சில்லறைக் கட்ட டங்கள் கவனமில்லாமல் பாழாகிக் கொண்டு வருகின்றன.

4. அநேக சிற்றாறுகளில் ஜலவாட் டம் ஸரியாக இல்லை.

5.அநேக இடங்களில், வெகுவாய் கடல்கரை தாலுகாக்களில், வடிகால் வஸதிகள் ரொம்பவும் கேவல ஸ்திதியில் இருக்கின்றன.

கடல்கரை தாலுகாக்களில் ஸரியான ஜலமில்லை என்ற ஒரு கஷ்டம் மட்டு மல்ல, உதாரணமாய் கடற்கரை தாலுகாவாகிய சீயாழி தாலுகாவை எடுத்துக் கொள்வோம். முதலில், அதற்கு காவேரியிலிருந்து நேரே ஜலம் அநேகமாய் பாசனத்துக்கு வருவதில்லை என்னலாம். வடிகால் ஜலம் பாயும் பழவாற்றிலிருந்து கிடைக்கும் ஜலந்தான் அந்தத் தாலுகாவுக்கு காவேரியிலிருந்து வரும் பாசன ஜலமாகிறது. காவேரியிலிருந்து அந்தத் தாலுகாவுக்குப் போதுமான ஜலம் வருவதில்லையென்பது வெகு காலத்துக்கு முன்னயே தெரிந்த விஷயம். 1866 ஆம் வருஷத்தில் கர்னல் ஓக்ஸ் என்பவர் எழுதிய ரிபோர்ட்டில் தெரிவித்திருக்கிறார். காவேரி அணைமேல் 5 அடி ஜலம் ஓடினால் காவேரியை அனுஸரித்த சிற்றாறுகளில் போதுமானதும் பூர்த்தியானவுமான ஜலம் போகவேண்டும். ஆனால் காவேரி ஸரிவரயில்லாததால் காவேரி அணை மேல் 7 அடி ஜலம் ஓடினால், அல்லது, ஜில்லாவுக்கு வேண்டிய அளவுக்கு இரண்டு மடங்காக ஜலம் பாய்ந்தால் தான் மாயவரம் தாலுகாவில் போது மான ஜலம் கிடைக்கிறது. அப்பொ ழுதும், சீயாழி தாலுகாவில் ஒரு பாகத்தில் ஜலம் மிகவும் குறைவாக இருந்தது.

வேண்டும் காலத்தில் பாசனத்துக்குப் போதுமான ஜலமில்லாத கஷ்டம் மட்டுமல்ல. ஜூலை மாஸத்தில் ஜலம் கிடைக்காவிட்டால் விவஸாயம் ஆரம்பிக்காமல் வட கிழக்கு மழைக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டி யிருக்கிறது. அது வந்ததும் அதோடு பழவாற்றிலும் வேண்டாத அகாலத்தில் வடிகால் ஜலம் வந்துவிடுகிறது. வடகிழக்குப் பருவ மழையாலும், தாம ஸித்து வரும் பழவாற்று ஜலத்தாலும் சீயாழிக்கு வேண்டாத காலத்தில் அதிக ஜலம் வந்து ஒரே வெள்ளமாகி விடுகிறது. கடற்கரை ஓரமாய் பூமி அதிக வாட்டமா யிராததினால் ஸரியான வடிகால் ஏற்பட இடமில்லாமல் இருக்கிறது. அநேக கெடுதல்களால் சீயாழியில் ஸரியான பாசனமில்லாமல் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள்.

சீயாழி தாலுகாவில் மூன்று பாசன ஆதாரங்களான ஆறுகளில், கொள்ளிடத்திலிருந்து பிரியும் ராஜன் வாய்க்கால் 14,000 ஏகராவுக்குப் பாய்கிறது. பழவாறு 38,000 ஏகராவுக்குப் பாய்கிறது. காவேரி 6000 ஏகராவுக்குப் பாய்கிறது. கொள்ளிடத்திலிருந்து ராஜன் வாய்க்கால் வழியாக வரும் ஜலம் விவஸாயத்துக்கு போதுமானது. ஆனால் ஜலம் ரொம்பவும் வீணாகப் போய்விடுகிறதென்று குறைப்பாடா யிருக்கிறது. காவிரியிலிருந்தும், பழவாற்றிலிருந்தும் வரும் ஜலம் பயிரிடும் காலத்தில் மிகக் குறைவாகவும், வடகிழக்கு மழை காலத்தில் வருவதில் கெடுதலுண்டாக்குவதாயு மிருக்கிறது. சீயாழி தாலுக்காவுக்கு ஸரியான வடிகால் ஏற்படுத்துவதைப் பற்றியும், தெற்கு ராஜன் வாய்க்காலையும், குமுக்கு மண்ணியாற்றையும் சீர்திருத்தி அவைகளின் வழியாக அதிக ஜலம் கொண்டு வந்து பழவாற்றிலும் புது மண்ணியாற்றிலும் விட்டு பாசனத்தை வ்ருத்தி செய்வதைப் பற்றியும் ப்ரே ரணைகள் செய்யப்பட்டன. கொள்ளி டத்திலிருந்து கீழ் அணைக்கட்டுக்கு மேல், பழவாற்றுக்கு அதிக ஜலம் விடுவதைப் பற்றியும் ஆலோசனை செய்தார்கள். என்ன யோசனை செய் தென்ன, என்ன ஆராய்ச்சிகள் செய்து பார்த்து மென்ன, நாளது வரையில், விவஸாயகாலத்தில் போதுமான ஜலம் இன்னும் வந்தபாடில்லை.; காலா காலத்தில் விவஸாயம் செய்யாத பட்சத்தில் தகுந்த வேலையாட்கள் கிடைப்பதில்லை. விவஸாய வேலைகள் முடியும் வரையில் போதுமான ஜலம் கிடைப்பதும் கஷ்டமாகிவிடுகிறது. ஜூலை மாஸத்தில் போதுமான ஜலம் முதல் போக ஸாகுபடிக்குக் கிடைக் குமானால், சீயாழி மிராசுதார்கள் இரண்டாவது போகம் ஸாகுபடி செய்யக் கூட ஆசைப்படமாட்டார்கள். இப்படி காலா காலத்தில் ஸாகுபடி செய்ய முடியாமலும், வெள்ளம் பாழாய் போய் மாஸூல் கிட்டாததாலும் கடற் கரை தாலுகாக்களிலுள்ள ஜனங்கள் பயமடைந்து அதனால் அநேகர் அந்தத் தாலுகாக்களிலிருந்து பிற விடங்களுக் குக் குடியேறிச் செல்கின்றார்கள்.

பட்டுக்கோட்டையிலுள்ளவர்களுக்கு இவைகளை யெல்லாம் பற்றி அவ்வளவு கவலை இல்லாமலிருக்கலாம். காவே ரியிலோ அமராவதியிலோ அல்லது பவானியிலோ அல்லது வேறு எங்கேயோ அதிக ஜலம் தேக்கி வைத்து, பட்டுக்கோட்டை முதலிய இடங்களுக்கு ஜலம் வரும்படி ஏற்பாடு செய்ய உத்தேசித்திருக்கும் காவேரி ப்ராஜெக்ட்டைப் பற்றித்தான் அவர்கள் அதிகம் கவனிப்பார்கள். இப் பொழுது இருக்கும் பாசன வடிகால் ஏற்பாடுகளை திருத்தம் செய்து கொண்டால் காவேரி ப்ராஜெக்ட் கைகூடினாலும் அதிக பலனடையலா மல்லவா? மேலும், காவேரி பாசன விஷயமாய் மைஸூர் கவர்ன்மெண் டார் மதராஸ் கவர்ன்மெண்டை விட முன்னாலே விழித்துக் கொண்டு விட்டார்கள். மைஸூர் பாசன ஸ்கீம் வந்துவிட்டால் பட்டுக்கோட்டைக்கு வரும் காவேரி ஜலம் குறைவடைந்து விடுமாதலால், இப்பொழுது வரும் ஜலத்தை, சீர்திருத்திய வாய்க்கால் மூலமாகவும், வடிகால் மூலமாகவும், ஒழுங்குபடுத்தி செட்டாய் பாய்ச்ச வேண்டிவரும் என்பது நன்றாய் விளங்குகிறது.

இரிகேஷன் கமிஷன் ரிப்போர்ட் டின்படி காவேரி நீராரம்ப பாசன வேலைகளுக்குப் போட்ட மூலதனத் துக்கு நல்ல லாபம் வருகிறது. 1900-_01 ஆம் வருஷம் முடியும் அய்ந்து வருஷங் களில் ஸராஸரி ஒவ்வொரு வருஷத் துக்கும் காவேரியின் பாசன நிலங்களில் வந்த ரிவின்யூ ரூபா 42,31,000. ஆனால் இதில் 32,91,000 ரூபா பழைய பாசனத் தினால் வரும் வரும்படி போக பாக்கி யுள்ளது ஸர்க்காரால் செய்யப்பட்ட பாசன வேலைகளின் பயனாகும். இந்த பாக்கியானது ஜலத்தை ஸரிவரப் பிரித்துக் கொடுப்பதற்கு போட்ட ஸ்வல்ப முதலுக்கு நூற்றுக்கு முப்பத்தேழு விகிதம் வட்டி கட்டுகிறது. கீழ்க்கொள்ளிட பாசனத்தால் வந்த வரும்படி ரூ 4,26,000. இதில் 1,50,000 ரூபா பழைய பாசனத்தால் வந்த ரிவின் யூவாகும். புது ரிவின்யூ போட்ட முதலுக்கு 100-க்கு 25 வீதம் வட்டி கட்டி வருகிறது. இப்படி நூற்றுக்கு 37_ம், 25_ம், வட்டி கட்டும் துறைகளில் பணம் போடுவது மிகவும் இன்பகரமானதே.

ஆனால் கவர்ன்மெண்டார் இப்பொ ழுது வியாபாரம் செய்யும் கம்பெனி யாயில்லை. அப்படியே கம்பெனியாயி ருந்தாலும், வியாபார முறையில் இப்பொழுது நல்ல வரும்படி வரும் வேலைகளை இன்னும் நல்ல ஸ்திதியில் வைத்திருப்பது இன்னும் அந்த வ்யாபாரத்துக்கு ஒத்ததாகவே யிருக்கும். இந்த ராஜதானியில் உள்ள பாசன ஏற்பாடுகளின் நிர்வாகச் செலவுகளில் காவேரிப் பாசன நிர்வாகச் செலவுதான் மிகவும் குறைவானது என்று தெரிய வருகிறது. கணக்குகள் பின் வருமாறு:

பாசன ஏற்பாடுகள்:- பத்து வருஷத் துக்கு ஸராஸரி பாசன நிலத்தில் ஒரு ஏகர்
நிர்வகிக்கச் செலவு

கோதாவரி நீராரம்பம் 5.37 அணா

கிருஷ்ணா நீராரம்பம் 6.51 அணா

பெண்ணையாற்றுப் பாய்ச்சல் 5.58 அணா

பெரியாறு 9.84 அணா
ஸ்ரீவைகுண்டம் 5.00 அணா

காவேரி நீராரம்பம் 1.80 அணா

ராஜதானியில் உள்ள மற்ற பாசன ஏற்பாடுகளை உத்தேசித்து காவேரி நீராரம்பத்தை ஸரியாக வைத்துக் கொள்ளப் பணம் ஸ்வல்பமாகச் செலவழிக்கப்படுகிறது. அதோடு கூட ஜலத்தைப் பங்கிடுவதற்கும் மேம் பார்வை யிடுவதற்கும், தக்க ஸிப்பந்தி களும் ஏற்படுத்தப் படவில்லை. பட்டுக்கோட்டையில் நீராரம்பமில்லாத இடங்களில் பாசன ஏரிகள் நல்ல ஸ்திதியிலில்லை என்பது தெரிந்த விஷயமே. ஏரிகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும். நீராரம்ப பாசனவேலைகள் தக்க மேம்பார்வை யுடனிருக்க வேண்டும். அவைகள் விஷயத்தில் இன்னும் அதிகப் பணம் செலவழிக்க வேண்டும்.
(தொடரும்)

Posted in: கட்டுரை விடுதலை

Friday, November 25, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (3) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர் ~ விடுதலை

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (3) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்
பட்டுக்கோட்டையிலுள்ளவர்களுக்கு இவைகளை யெல்லாம் பற்றி அவ்வளவு கவலை இல்லாமலிருக்கலாம். காவிரியிலோ அமராவதியிலோ அல்லது பவானியிலோ அல்லது வேறு எங்கேயோ அதிக ஜலம் தேக்கி வைத்து, பட்டுக்கோட்டை முதலிய இடங்களுக்கு ஜலம் வரும்படி ஏற்பாடு செய்ய உத்தேசித்திருக்கும் காவிரி ப்ராஜெக்ட்டைப் பற்றித்தான் அவர்கள் அதிகம் கவனிப்பார்கள்.

இப்பொழுது இருக்கும் பாசன வடிகால் ஏற்பாடுகளை திருத்தம் செய்து கொண்டால் காவிரி ப்ராஜெக்ட் கைகூடினாலும் அதிக பலனடையலா மல்லவா? மேலும், காவிரி பாசன விஷயமாய் மைஸூர் கவர்ன்மெண்டார் மதராஸ் கவர்ன் மெண்டை விட முன்னாலே விழித்துக் கொண்டு விட்டார்கள். மைஸூர் பாசன ஸ்கீம் வந்துவிட்டால் பட்டுக் கோட்டைக்கு வரும் காவேரி ஜலம் குறைவடைந்து விடுமாதலால், இப்பொழுது வரும் ஜலத்தை, சீர்திருத்திய வாய்க்கால் மூலமாகவும், வடிகால் மூலமாகவும், ஒழுங்குபடுத்தி செட்டாய் பாய்ச்ச வேண்டிவரும் என்பது நன்றாய் விளங்குகிறது.

இரிகேஷன் கமிஷன் ரிப்போர்ட் டின்படி காவேரி நீராரம்ப பாசன வேலைகளுக்குப் போட்ட மூலதனத் துக்கு நல்ல லாபம் வருகிறது. 1900-_01 ஆம் வருஷம் முடியும் அய்ந்து வருஷங் களில் ஸராஸரி ஒவ்வொரு வருஷத்து க்கும் காவேரியின் பாசன நிலங்களில் வந்த ரிவின்யூ ரூபா 42,31,000. ஆனால் இதில் 32,91,000 ரூபா பழைய பாசனத் தினால் வரும் வரும்படி போக பாக்கி யுள்ளது ஸர்க்காரால் செய்யப்பட்ட பாசன வேலைகளின் பயனாகும்.

இந்த பாக்கியானது ஜலத்தை ஸரிவரப் பிரித்துக் கொடுப்பதற்கு போட்ட ஸ்வல்ப முதலுக்கு நூற்றுக்கு முப்பத்தேழு விகிதம் வட்டி கட்டுகிறது. கீழ்க்கொள்ளிட பாசனத்தால் வந்த வரும்படி ரூ 4,26,000. இதில் 1,50,000 ரூபா பழைய பாசனத்தால் வந்த ரிவின்யூவாகும். புது ரிவின்யூ போட்ட முதலுக்கு 100_-க்கு 25 வீதம் வட்டி கட்டி வருகிறது. இப்படி நூற்றுக்கு 37_ம், 25_ம், வட்டி கட்டும் துறைகளில் பணம் போடுவது மிகவும் இன்பகரமானதே. ஆனால் கவர்ன்மெண்டார் இப்பொ ழுது வியாபாரம் செய்யும் கம்பெனி யாயில்லை. அப்படியே கம்பெனியா யிருந்தாலும், வியாபார முறையில் இப்பொழுது நல்ல வரும்படி வரும் வேலைகளை இன்னும் நல்ல ஸ்திதியில் வைத்திருப்பது இன்னும் அந்த வ்யாபாரத்துக்கு ஒத்ததாகவே யிருக்கும். இந்த ராஜதானியில் உள்ள பாசன ஏற்பாடுகளின் நிர்வாகச் செலவுகளில் காவேரிப் பாசன நிர்வாகச் செலவுதான் மிகவும் குறைவானது என்று தெரிய வருகிறது. கணக்குகள் பின் வருமாறு:

பாசன ஏற்பாடுகள்:-

பத்து வருஷத் துக்கு ஸராஸரி பாசன நிலத்தில் ஒரு ஏகர் நிர்வகிக்கச் செலவு

கோதாவரி நீராரம்பம் 5.37 அணா
கிருஷ்ணா நீராரம்பம் 6.51 அணா
பெண்ணையாற்றுப் பாய்ச்சல் 5.58 அணா
பெரியாறு 9.84 அணா
ஸ்ரீவைகுண்டம் 5.00 அணா
காவேரி நீராரம்பம் 1.80 அணா

ராஜதானியில் உள்ள மற்ற பாசன ஏற்பாடுகளை உத்தேசித்து காவேரி நீராரம்பத்தை ஸரியாக வைத்துக் கொள்ளப் பணம் ஸ்வல்பமாகச் செலவழிக்கப்படுகிறது. அதோடு கூட ஜலத்தைப் பங்கிடுவதற்கும் மேம் பார்வையிடுவதற்கும், தக்க ஸிப்பந் திகளும் ஏற்படுத்தப் படவில்லை.

பட்டுக்கோட்டையில் நீராரம்பமில்லாத இடங்களில் பாசன ஏரிகள் நல்ல ஸ்திதியிலில்லை என்பது தெரிந்த விஷயமே. ஏரிகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும். நீராரம்ப பாசனவேலைகள் தக்க மேம்பார்வை யுடனிருக்க வேண்டும். அவைகள் விஷயத்தில் இன் னும் அதிகப் பணம் செலவழிக்க வேண்டும்.

இரிகேஷன் கமிஷன் ரிபோர்டில் எழுதியிருக்கிறார்கள்:-

புதியவையான பாசன வேலைகள் ஆரம்பிக்க தகுந்த இடங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே இருப்பவைகளை அதிகப் படுத்தவாவது, சீர்திருத்தவாவது அதிகப் பணம் செலவழிக்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஹேதுவுண்டு. இது விஷயமாய் ஏற்படும் செலவை பாசன வேலைகளின் மூலதனச் செலவாக எண்ணினாலும் அநேகமாய் தக்க வட்டி கட்டுமென்பதில் ஸந்தேக மில்லை என்று எழுதியிருக்கிறார்கள். கமிஷன் மெம்பர்களும் லாபம் வரத்தக்க வேலைகளில் அதிகப் பணம் செலவழிக்கலாமென்று சொல்லி யிருக்கிறார்கள்.

இந்த ராஜதானியில் கவர்ன் மெண்டார் பாசன வேலைகள் செய் வதில் ரொம்பவும் மெதுவாயிருக் கிறார்கள். காவேரி நீராரம்ப விஷயத் தில் பாசன வேலைகளுக்கு பணம் கொடுப்பதாயிருந்தாலும் வேலை யாட்கள் அகப்படுவது அரிதாயிருக் கிறது என்று எப்பொழுதும் சொல்லி வருகிறார்கள். ஸரியான கூலி கொடுத் தால் இந்தியாவில் வேலையாட்கள் கிடைப்பார்கள்.

தஞ்சாவூர் ஜில்லா விலிருந்து பர்மா, லங்கை, ஸ்ட்ரெய்ட் ஸெட்டில்மெண்டுகள் இவைகளுக்கு வேலையாட்கள் குடியேறிப் போகி றார்கள். ஸரியான கூலி கொடுத்தால் வேலையாட்களை தஞ்சாவூரிலேயே இருக்கும்படி செய்துவிடலாம். கூலி வித்யாஸப்படுவதால் தான் கூலி யாட்கள் ஊர்விட்டூர் போகிறார்கள்.

தஞ்சாவூர் பாசனம் ஏற்பாட்டில் சீர்தி ருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு வேலையாட்கள் வேறு நாடுகளுக்குப் போகிறார்கள் என்றும், அதை நிறுத்த ஏதாவது செய்து ஜில்லாவில் ஜனத்தொகை குறைவதைத் தடுக்க வேண்டுமென்றும், கூச்சல்பாடு உண்டாகியிருக்கிறது. இந்த இரண்டு குறைகளையும் ஒரே வழியில் நிவர்த்தி செய்யலாம். பாசன ஏற்பாடுகளை சீர் திருத்த வேலை தொடங்கி வேலை யாட்களுக்கு தக்க கூலி கொடுக்க வேண்டும்.

பாசன வேலைக்கு வேண்டிய மூலதனமும் வேலையாட்களையும் தவிர, பாசன சீர்திருத்த ஏற்பாட்டில் இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. நீராரம்பங்களில் பாசன வேலைகளை சீர்திருத்த வேண்டு மானால் டெல்டாவிலுள்ள ஜனங் களையும் கலந்து யோசனை செய்ய வேண்டும்.

அவர்கள் நாளது வரையில் அந்தப் பாசன விஷயத்தில் அவரவருக்குத் தக்கபடி ஒருவகை பாத்யத்தை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நஷ்டமுண்டாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து முடிக்க கவர்ன்மெண்டார் தக்க ஏற்பாட்டுடன் ஆரம்பிக்க வேண்டும். அதனோடு ஜனங்களுடைய அபிப் ராயத்தையும் அறிந்து அதை அனுஸரித்து சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.

கான்பரென்ஸில் அக்ராஸனாதிபதி பேசிய பிறகு பின்வரும் தீர்மானங்கள் செய்யப்பட்டன.

1. காலஞ்சென்ற மிஸ்டர் ஹியூம், ஆர்.ரகுநாதராவ், வி.க்ருஷ்ணஸாமி அய்யர், இவர்களுடைய மரணத்துக்காக அனுதாபங்காட்டித் தீர்மானங்கள் செய்யப்பட்டன.

2. ஆனரபில் மிஸ்டர் பி.எஸ்.சிவஸ் வாமி அய்யர் நிர்வாக ஸபையில் மெம்பராக நியமிக்கப்பட்டதைப் பற்றி ஸந்தோஷங்காட்டி ஒரு தீர்மானம் செய்யப்பட்டது.

(தொடரும்)
~ விடுதலை

Sunday, November 13, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (2) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (2) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்
இந்தப் பாசன ஏற்பாட்டில் மனிதர் களால் வெட்டப்பட்ட சிற்றாறு களாவது பெரிய மதகுகள் போன்ற வைகளாவது கிடையாது. ஜலமெல் லாம் இயற்கையான சிற்றாறுகள் வழியாக நீராரம்பம் எங்கும் பாய்கிறது.

ஜலம் ஸரியானபடி சிற்றாறுகளில் போகிறதா என்று பார்ப்பதிலும், ஒரு ஆற்றில் ஜலம் குறைந்து வயல்கள் காய்ந்து போகாமலும், இன்னொன்றில் ஜலம் அதிகமாய்ப் போய் வயல்கள் கெடுதலடையாமலும் இருக்கும்படி பார்ப்பதில் மட்டும் இஞ்சினீர் இலாகா உத்யோகஸ்தர்கள் கவனம் செலுத்து கிறார்கள். கர்னல் ஸ்மார்ட் என்பவர் நீராரம்பங்களுக்கு ஜலம் ப்ரவேசிக்கு முன் ஜலத்தை ஒழுங்குபடுத்த அவசியமான சீர்திருத்தங்களை செய்து முடித்தார். ஜலம் ஸரிவர பாய வேண்டியதைக் குறித்தும் அவர் ப்ரேரணைகள் செய்தார். ஆனால் கவர்ன்மெண்டார் அவைகளை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வர யாதொன்றும் செய்யவில்லை.

இந்தியா கவர்ன்மெண்டார் அடைப்பாறு, ஹரிச்சந்த்ர நதி, இந்த இரண்டு நதிகள் ஸம்பந்தமாய் சீர்திருத்தங்கள் செய்யவேண்டு மென்று உத்திரவு செய்தும், அடைப்பாறு ஸம்பந்தப்பட்ட மட்டில் சீர்திருத்தங்கள் செய்யப்பட் டிருக்கின்றன. ஹரிச்சந்த்ர நதி விஷயமாய் இன்னும் ஒன்றும் செய்யப் படவில்லை.

காவேரி நீராரம்ப பாசனமானது தஞ்சாவூர் ஜில்லாவுக்கு உயிர் போலிருக்கிறது. ஆகையால் இந்தக் கான்பரென்ஸானது காவேரி பாசன நிலைமையை நன்றாய் ஆராய்ந்து அதன் குறை குற்றங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாசன ஏற்பாட்டில் அநேக பெரும் குறை பாடுகள் இருக்கின்றன. அவைகள் விவஸாயிகளுக்கு அதிக நஷ்ட முண்டாக்குகின்றன. க்ராமவாஸிகள் இருபது முப்பது வருஷங்களாக அநேக குறைபாடுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தும், அவைகளுக்கு இன் னும் இதுவரையில் ஒரு மோட்சத்தையும் காணோம்.

காவேரி நீராரம்பங்களிலுள்ள குறைகளில் முக்கியமானவைகளாவன:-

1. முக்யமான ஆறுகளில் ஜலம் பக்கங்களிலுள்ள நிலங்களை அறுக் காமல் ஒழுங்காய் ஓட ஸரிவர ஏற்பாடுகள் செய்வதில்லை.

2. சிற்றாறுகள் ஸரிவர பார்வை யில்லாமலும், அவைகளில் ஜலம் விடுவதும், காபந்து செய்வதும் இன்னார் வசமிருக்கிறதென்று தெரியாமலும், ரெவின்யூ டிபார்ட்மெண்டார் பி.டப்ளியு. ஆதீனத்தில் இருக்கிற தென்றும், பி.டப்ளியூ டிபார்ட்மெண் டார் ரெவின்பூ டிபார்ட்மெண்டாரிட மிருக்கிற தென்றும் நினைத்து வருகிறார்கள்.

3. சிற்றாறுகளிலுள்ள மதகுகள் போன்ற அநேக சில்லரைக் கட்டி டங்கள் கவனமில்லாமல் பாழாகிக் கொண்டு வருகின்றன.

4. அநேக சிற்றாறுகளில் ஜல வாட்டம் ஸரியாக இல்லை.

5.அநேக இடங்களில், வெகுவாய் கடல்கரை தாலுகாக்களில், வடிகால் வஸதிகள் ரொம்பவும் கேவல ஸ்திதியில் இருக்கின்றன.

கடல்கரை தாலுகாக்களில் ஸரியான ஜலமில்லை என்ற ஒரு கஷ்டம் மட்டுமல்ல, உதாரணமாய் கடற்கரை தாலுகாவாகிய சீயாழி தாலுகாவை எடுத்துக் கொள்வோம். முதலில், அதற்கு காவேரியிலிருந்து நேரே ஜலம் அநேகமாய் பாசனத்துக்கு வருவதில்லை என்னலாம். வடிகால் ஜலம் பாயும் பழவாற்றிலிருந்து கிடைக்கும் ஜலந் தான் அந்தத் தாலுகாவுக்கு காவேரி யிலிருந்து வரும் பாசன ஜலமாகிறது. காவேரியிலிருந்து அந்தத் தாலு காவுக்குப் போதுமான ஜலம் வருவ தில்லையென்பது வெகு காலத்துக்கு முன்னயே தெரிந்த விஷயம்.

1866 ஆம் வருஷத்தில் கர்னல் ஓக்ஸ் என்பவர் எழுதிய ரிபோர்ட்டில் தெரிவித் திருக்கிறார். காவேரி அணைமேல் 5 அடி ஜலம் ஓடினால் காவேரியை அனுஸரித்த சிற்றாறுகளில் போது மானதும் பூர்த்தியானதுமான ஜலம் போகவேண்டும். ஆனால் காவேரி ஸரிவரயில்லாததால் காவேரி அணை மேல் 7 அடி ஜலம் ஓடினால், அல்லது, ஜில்லாவுக்கு வேண்டிய அளவுக்கு இரண்டு மடங்காக ஜலம் பாய்ந்தால் தான் மாயவரம் தாலுகாவில் போது மான ஜலம் கிடைக்கிறது. அப்பொ ழுதும், சீயாழி தாலுகாவில் ஒரு பாகத் தில் ஜலம் மிகவும் குறைவாக இருந்தது.

வேண்டும் காலத்தில் பாசனத் துக்குப் போதுமான ஜலமில்லாத கஷ்டம் மட்டுமல்ல. ஜூலை மாஸத்தில் ஜலம் கிடைக்காவிட்டால் விவஸாயம் ஆரம்பிக்காமல் வட கிழக்கு மழைக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டி யிருக்கிறது. அது வந்ததும் அதோடு பழவாற்றிலும் வேண்டாத அகாலத்தில் வடிகால் ஜலம் வந்துவிடுகிறது. வடகிழக்குப் பருவ மழையாலும், தாமஸித்து வரும் பழவாற்று ஜலத்தாலும் சீயாழிக்கு வேண்டாத காலத்தில் அதிக ஜலம் வந்து ஒரே வெள்ளமாகிவிடுகிறது. கடற்கரை ஓரமாய் பூமி அதிக வாட்டமா யிராததினால் ஸரியான வடிகால் ஏற்பட இடமில்லாமல் இருக்கிறது. அநேக கெடுதல்களால் சீயாழியில் ஸரியான பாசனமில்லாமல் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள்.

சீயாழி தாலுகாவில் மூன்று பாசன ஆதாரங்களான ஆறுகளில், கொள் ளிடத்திலிருந்து பிரியும் ராஜன் வாய்க்கால் 14,000 ஏகராவுக்குப் பாய் கிறது. பழவாறு 38,000 ஏகராவுக்குப் பாய்கிறது. காவேரி 6000 ஏகராவுக்குப் பாய்கிறது. கொள்ளிடத்திலிருந்து ராஜன் வாய்க்கால் வழியாக வரும் ஜலம் விவஸாயத்துக்கு போதுமானது.

ஆனால் ஜலம் ரொம்பவும் வீணாகப் போய்விடுகிறதென்று குறைப்பாடா யிருக்கிறது. காவேரியிலிருந்தும், பழவாற்றிலிருந்தும் வரும் ஜலம் பயிரிடும் காலத்தில் மிகக் குறைவ கவும், வடகிழக்கு மழை காலத்தில் வருவதில் கெடுதலுண்டாக்குவதாயு மிருக்கிறது. சீயாழி தாலுக்காவுக்கு ஸரியான வடிகால் ஏற்படுத்துவதைப் பற்றியும், தெற்கு ராஜன் வாய்க் காலையும், குமுக்கு மண்ணியாற்றையும் சீர்திருத்தி அவைகளின் வழியாக அதிக ஜலம் கொண்டு வந்து பழவாற்றிலும் புது மண்ணியாற்றிலும் விட்டு பாச னத்தை வ்ருத்தி செய்வதைப் பற்றியும் ப்ரேரணைகள் செய்யப்பட்டன.

கொள்ளிடத்திலிருந்து கீழ் அணைக் கட்டுக்கு மேல், பழவாற்றுக்கு அதிக ஜலம் விடுவதைப் பற்றியும் ஆலோ சனை செய்தார்கள். என்ன யோசனை செய்தென்ன, என்ன ஆராய்ச்சிகள் செய்து பார்த்து மென்ன, நாளது வரையில், விவஸாயகாலத்தில் போது மான ஜலம் இன்னும் வந்தபாடில்லை.; காலா காலத்தில் விவஸாயம் செய்யாத பட்சத்தில் தகுந்த வேலையாட்கள் கிடைப்பதில்லை. விவஸாய வேலைகள் முடியும் வரையில் போதுமான ஜலம் கிடைப்பதும் கஷ்டமாகிவிடுகிறது.

ஜூலை மாஸத்தில் போதுமான ஜலம் முதல் போக ஸாகுபடிக்குக் கிடைக்கு மானால், சீயாழி மிராசுதார்கள் இரண்டாவது போகம் ஸாகுபடி செய்யக் கூட ஆசைப்படமாட்டார்கள். இப்படி காலா காலத்தில் ஸாகுபடி செய்ய முடியாமலும், வெள்ளம் பாழாய் போய் மாஸூல் கிட்டாததாலும் கடற்கரை தாலுகாக்களிலுள்ள ஜனங்கள் பயமடைந்து அதனால் அநேகர் அந்தத் தாலுகாக்களிலிருந்து பிற விடங்களுக்குக் குடியேறிச் செல்கின்றார்கள்.
(தொடரும்)

Thursday, November 10, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்


தொகுப்பாளர்: திராவிடர் இயக்க ஆய்வாளர் அருணாஅரசுகோ பாவேந்தன்

(அன்றைய சென்னை மாகாணத் தில் திராவிடர் இயக்கத்தின் தாய்க் கழகமான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பை 1916ஆம் ஆண்டு தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர் டி.எம். நாயர் (1868 _ 1919). பாலக்காடு மாவட்டம் திரூரில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர் தந்தை பெரியாரால் திராவிட லெனின் என போற்றப் பட்டவர். பொது வாழ்க்கையில் 1904ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த டி.எம். நாயர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியவர். காலனிய அரசு உருவாக்கிய தொழிற்சாலை களுக்கான தொழி லாளர் ஆணையத்தின் முக்கிய உறுப் பினராகச் செயல்பட்டவர். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக 1912-_1916 கால கட்டத்தில் பணியாற்றிய போது தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்பற்றி பட்டுக் கோட்டையில் நடந்த தஞ்சாவூர் ஜில்லா மாநாட்டில் ஆற்றிய உரையின் பகுதிகளை சென்னை யிலிருந்து வெளிவந்த பிழைக்கும் வழி மாத இதழ் நவம்பர் (1912) டிசம்பர் (1912) இதழ்களில் வெளியிட்டுள்ளது. டி.எம். நாயரின் வாழ்க்கை வரலாற்றெழுதுதலுக்கு உதவும் இந்த அரிய ஆவணம் முதன்முறையாக மறுவெளியீடு செய்யப்படுகின்றது.)
தஞ்சாவூர் ஜில்லா கான்ஃபரென்ஸ்

நாளது நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று பட்டுக் கோட்டையில் தஞ்சாவூர் ஜில்லா கான்ஃபரென்ஸ் நடந்தது. அப்பொழுது சென்னையில் பிரபல வைத்யரும், முனிஸிபல் கமிஷ னரும், இப்போது சென்னை லெஜிஸ் லேடிவ் கௌன்ஸில் மெம்பராய் எலெக்ஷன் செய்யப் பெற்றவருமான டாக்டர் டி.எம்.நாயர் அக்ராஸனம் வகித்து, தஞ்சாவூர் ஜில்லா நீர்ப் பாசனத்தைப் பற்றியும், அந்த ஜில்லா விலிருந்து கூலிகள் அந்ய தேசங் களுக்குப் போவதைப் பற்றியும், டிப்பைப் பற்றியும், ஸ்தல சுய ஆட்சியைப் பற்றி யும் பேசினார். அதன் பிறகு கான்ப ரென்ஸில் பல தீர்மானங்கள் செய்யப் பட்டன.

டாக்டர் நாயர் நீர்ப் பாச னத்தைப் பற்றிப் பேசியதையும் கான்ப ரென்ஸில் நடந்த தீர்மானங்களைப் பற்றியும் இந்த ஸஞ்சிகையில் யெழுதி யிருக்கிறோம். டாக்டர் நாயர் பேசிய மற்ற விஷயங்களைப் பற்றி அடுத்த ஸஞ்சிகையில் விவரிப்போம்.

தஞ்சாவூர் ஜில்லாவில் அநேக புத்திமான்கள் இருப்பது போலவே ராஜதானியிலுள்ள மற்ற ஜில்லாக்களை உத்தேசித்து தஞ்சாவூர் ஜில்லா நிலத் தின் வளப்பமும் ச்லாக்யமாயிருக்கிறது. ஆனால் நிலம் விளைவதும் விவஸாயம் கடைத்தேறுவதும் மழையையும் காவேரியில் வரும் ஜலத்தையும் பொறுத்திருக்கிறது.

ஆப்ரிக்காவில் இஜிப்ட் என்பதாக ஒரு தேசம் இருக்கிறது. அதில் நைல் என்பதாக ஒரு பெரிய நதி ஓடுகிறது. லார்ட் ரோஸ்பரி என்பவர் ஒரு ஸமயம் இஜிப்ட் தேசத்தைப் பற்றி பேசியபோது இஜிப்ட் தேசமே நைல் நதியாகும், நைல் நதியே இஜிப்ட் தேசமாகும் என்றார். அப்படியே நாமும் தஞ்சாவூரே காவேரி நதியாகும், காவேரி நதியே தஞ்சாவூர் ஜில்லாவாகும் என்று சொல்வதும் ஸரியாகும்.

காவேரியில் சலாக்யமான வண்டல் வருவதால் நாளது வரையில் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு தென்னிந் தியாவின் தோட்டம் என்று கௌரவம் இருந்து வருகிறது. இந்தக் காவேரி இல்லாவிட்டால் தஞ்சையின் நிலைமை மிகவும் குறைவு அடைந்திருக்கும். இந்த விஷயம் வெகுகாலமாகத் தெரிந்ததே. இதை உத்தேசித்து ஹிந்து ராஜாக்கள் வெகுகாலத்துக்கு முன்னாலேயே காவேரியிலிருந்து பாசனத்துக்கான வேலைகள் ஏற்பாடு செய்ய ஆரம் பித்தார்கள். இங்கிலீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுவதற்கு முன்னாலேயே இவை ஆரம்பிக்கப்பட்டன.

அநேக ஆறுகளிலுள்ள ஜலத்தைத் தேக்கி பக்கத்தில் உள்ள நிலங்களுக்குப் பாய்ச்சுவதற்குக் கட்டிய பழைய கட்டிடங்கள் இன்னும் அநேகம் இருக்கின்றன.

அவைகளால் தஞ்சாவூர் அரசர்கள் நீர்ப்பாசன விஷயமாய் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டி ருந்தார்கள் என்பது தெரிகிறது. க்ராண்ட் அணைக்கட்டு என்று சொல் லப்படும் கல்லணையுங் கூட வெகு காலத்துக்கு முன்னால் கட்டப்பட்டதே.

சில வருஷங்களுக்கு முன்னால் சில மாறுதல்கள் மாத்திரம் செய்யப்பட்டு தூக்கு ஷட்டர்கள் போட்டிருக் கிறார்கள். உண்மையில், 1836 ஆம் வருஷத்தில் ஸர் ஆர்தர் காட்டன் என்பவர் அப்பர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் மேல் அணைக்கட்டு கட்டின வரையில், தஞ்சாவூரார்கள் ஹிந்து அரசர்கள் செய்த பாசன ஏற்பாட்டின் பலனையே அடைந்து வந்தார்கள்.

1801 ஆம் வருஷத்தில் ப்ரிட்டிஷார் தஞ்சாவூரை தமது வசம் அடைந்ததற்கு முன் மாத்திரம் தேசமானது குழப்பமான நிலைமையில் இருந்ததால் காவேரி நீராரம்பங்களின் பாசனம் மிகவும் கெடுதலாயிருந்தது.

கம்பெனியார் தஞ்சாவூரைக் கைவசப் படுத்திக் கொண்டவுடனே காவேரி நீராரம்பங்களின் பாசனத்தை வ்ருத்தி செய்வதற்கு வேண்டிய ப்ரயத்னங்கள் செய்யப்பட்டன.

ஆரம்பத்தில் காவேரியில் உள்ள அதிக மணலை அப்புறப் படுத்துவதிலேயே வெகுவாய் ப்ரயத்னங்கள் செய்யப் பட்டன. ஆனால் அந்த முயற்சிகளால் அதிக பலன் ஒன்றும் உண்டாகவில்லை. கொள்ளி டத்தில் தலைப்பில் அப்பர் அணைக் கட்டுக் கட்டினபிறகுதான் காவேரிக்கு நன்றாய் ஜலம் வரலாயிற்று.

இப்படி மேல் அணைக்கட்டு கட்டினதால் கொள்ளிடத்திலிருந்து பிரியும் வாய்க்கால்களுக்கு ஜலம் குறைந்து போயிற்று. அதனால் வரும் ஜலநஷ்டத்துக்கு ஈடு செய்ய லோயர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் கீழ் அணைக்கட்டு ஒன்று 70 மையி லுக்கு அப்பால் கட்ட வேண்டியதா யிற்று.

அதன் பிறகு 1887_-1889 ஆம் வருஷத்தில் கல்லணையில் காவேரி, வெண்ணாறு, ஹெட் ரெகுலேடர்கள் கட்டவே, காவேரி, வெண்ணாறு இந்த இரண்டு நதிகளிலும் ஜலம் போவதை ஒழுங்குபடுத்துவது ரொம்ப ஸுலப மாயிற்று.

பிற்பாடு செய்த சீர்திருத் தங்கள் எல்லாம் வெள்ள காலத்தில் ஜலத்தை சீர்படுத்தவும் ஜலத்தை ஸரிவர வாய்க்கால்களில் பாய்ச்சவுமே செய்யப்பட்டவை. இவைகளால் காவேரி பாசன ஏற்பாட்டுக்கும் இந்தி யாவிலுள்ள மற்ற பாசன ஏற்பாடுகளுக் கும் ரொம்ப வித்யாஸமிருக்கிறது.
(தொடரும்)                                                                         (நன்றி.விடுதலை மலர் 05.11.2011

Friday, May 27, 2011

எட்டயபுரத்தில் பண்டைய காலஆவணங்கள் கட்டடம் எரிந்து சாம்பல்

  எட்டயபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பண்டைய காலத்து ஆவணங்கள் இருந்த கட்டடம் (ரிக்கார்டு ஆபிஸ் பில்டிங்) திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. 
எட்டயபுரம் இருபதாவது பட்டம் ஜெகவீரராம கெக்சில் எட்டப்ப நாயக்கர் குமாரர் ஜெகவீரராமகுமார் எட்டப்பநாயக்கர் கொல்லம் 742 ம் ஆண்டு அதாவது கி.பி.1567ம் ஆண்டு தை மாதம் எட்டயபுரம் நகரம் உருவாக்கப்பட்டதாகும். எட்டயபுரம் அரண்மனை வளாகத்திற்குள் அரண்மனை கட்டடம் உட்பட பல்வேறு கட்டடங்கள் உள்ளன. இதில் அரண்மனைக்கு அருகில் ரிக்கார்டு ஆபிஸ் பில்டிங் உள்ளது. இந்த கட்டடத்தில் பண்டைய காலத்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.  
 கட்டடம் எரிந்து இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கல், செங்கல், பதனீர் கலவையுடன் கூடிய சுண்ணாம்பு, கடுக்காய் கலந்து கட்டப்பட்ட கட்டடம். பழமையான ரேக்குகள், விட்டங்கள், உத்திரங்கள் ஆகியவை விலை உயர்ந்த மரங்களினால் ஆனது.  
 சேதமதிப்பு உடனடியாக கணக்கிட முடியவில்லை. தகவலறிந்து கோவில்பட்டி தீயணைக்கும் படை நிலைய அதிகாரி பொறுப்பு ராமசாமி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சுமார் 1 1/2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
                             நன்றி.தினமலர்.26.05.2011