Friday, May 27, 2011

எட்டயபுரத்தில் பண்டைய காலஆவணங்கள் கட்டடம் எரிந்து சாம்பல்

  எட்டயபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பண்டைய காலத்து ஆவணங்கள் இருந்த கட்டடம் (ரிக்கார்டு ஆபிஸ் பில்டிங்) திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. 
எட்டயபுரம் இருபதாவது பட்டம் ஜெகவீரராம கெக்சில் எட்டப்ப நாயக்கர் குமாரர் ஜெகவீரராமகுமார் எட்டப்பநாயக்கர் கொல்லம் 742 ம் ஆண்டு அதாவது கி.பி.1567ம் ஆண்டு தை மாதம் எட்டயபுரம் நகரம் உருவாக்கப்பட்டதாகும். எட்டயபுரம் அரண்மனை வளாகத்திற்குள் அரண்மனை கட்டடம் உட்பட பல்வேறு கட்டடங்கள் உள்ளன. இதில் அரண்மனைக்கு அருகில் ரிக்கார்டு ஆபிஸ் பில்டிங் உள்ளது. இந்த கட்டடத்தில் பண்டைய காலத்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.  
 கட்டடம் எரிந்து இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கல், செங்கல், பதனீர் கலவையுடன் கூடிய சுண்ணாம்பு, கடுக்காய் கலந்து கட்டப்பட்ட கட்டடம். பழமையான ரேக்குகள், விட்டங்கள், உத்திரங்கள் ஆகியவை விலை உயர்ந்த மரங்களினால் ஆனது.  
 சேதமதிப்பு உடனடியாக கணக்கிட முடியவில்லை. தகவலறிந்து கோவில்பட்டி தீயணைக்கும் படை நிலைய அதிகாரி பொறுப்பு ராமசாமி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சுமார் 1 1/2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
                             நன்றி.தினமலர்.26.05.2011

1 comment:

  1. very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


    anushka shetty

    ReplyDelete