Tuesday, May 26, 2009

வரலாற்று அறிவற்ற தமிழ் (சினிமா) ச் சமூகத்தின் சிந்தனைக்கு...

பாமரன் முதல் (எழுத்தாளர் பாமரன் அல்ல) தமிழ்த்தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரை அனைத்துத் தமிழர்களாலும் விரும்பப்படும் ஊடகம் தமிழ் சினிமா. இந்த கண்றாவி தமிழ் சினிமாவை (ஆணாதிக்க , இந்து சினிமா, நன்றி ; பாமரன்) தேசியத் தலைவருக்கு யார் அறிமுகப்படுத்தினாரோ தெரியவில்லை . . . நாடு பிடிக்க அந்த உத்தி சரியாக இருக்கும் என்று (தமிழகபாதிப்போ) தானும் பின்பற்ற விரும்பினாரோ!

நம்மூர் இயக்குநர்களை எல்லாம் வரிசையாக அழைத்து சினிமா தயாரிப்பு உத்திகளை கேட்டு படம் எடுக்க திட்டமிட்டிருந்தாரோ என்னவோ? (இதை முன் கூட்டிய அறிந்த அவருடைய எதிரிகள் ‘அவரையே’ டூப் போட்டு (நம்மூர் கமல் தோற்றார்) அச்சு அசலா மேக்கப்போட்டு படம் எடுத்து ஒளிபரப்பி மகிழ்ச்சியடைய . . . அதை ‘அம்பலப்படுத்திய’ நக்கீரன் கோபாலுக்கு ஒரு போட்டோசாப் கொட்டு வைத்த அதிர்வு. காம் ... என ‘தமிழ்த்தேசியத் திரைப்படம்’ தொடர்கிறது.

தமிழக காங்கிரஸ் (சினிமா தொடர்ப்பு மறந்துபோச்சு) திராவிட, பொதுவுடமை, தமிழ்த்தேசிய, தலித் இயக்கங்கள் வரை தங்களின் செயல்பாடுகளில் நம்பிக்கை வைத்துள்ளனரோ இல்லையோ, தங்களுக்கென சினிமாக்காரர்களைப் பிரச்சாரத்துக்கு வைத்துள்ளனர். எழுத்தாளர்கள், மனித உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், சிறுபத்திரிக்கையாளர்கள் (உயிர்மை மனுஷ்யபுத்திரனும் வந்துட்டார்* காலச்சுவடு கண்ணன் நீங்கள் எப்போ) அரசியல்வாதிகள், பல்கலைக்கழகப் பேராசிரியப் பெருந்தகைகள் உட்பட அனைவருமே சினிமாவில் முகங்காட்டி வரும் புதிய போக்கும் . . . தம்மடித்து, டம்ளர் க்ளிக்கி, தமிழ்த் தேசிய அரசியல் முதல் சேகுவரா வரை ‘கதைத்து’ காலம்போக்கும் முற்போக்கு ‘சினிமா சிநேகம்’ ‘பொங்கி நுரைத்து வழிகிறது.’

அண்மையில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், இல.தி.மு.க. டி.ராஜேந்தர் (அது என்ன இலட்சியமோ) போன்றோர் மேற்கொண்ட கூட்டணி சாகசங்களும் அவர்களோடு தேசிய கட்சிகளும், ‘சிவப்பு காம்ரேட்டுகளும்’ நடத்திய கூட்டணி பேச்சுகள் தமிழக வாக்காளர்களுக்கு நெஞ்சைவிட்டு அகலாத நகைச்சுவைக்காட்சிகள்.

தி.மு.க.சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நடிகர்கள் திரு.ரித்திஷ், திரு.நெப்போலியன், வெற்றி பெற்றுள்ளனர். (மத்திய சென்னை வேட்பாளர் வாய்ப்பு நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுக்கு கொடுக்கப்பட்டு பறிக்கப்பட்டது தனிக்கதை) பா.ஜ.கா.வின் வெற்றி வேட்பாளர் என சொல்லப்பட்ட திரு.திருநாவுக்கரசர், (அவரும் மூன்று படங்களில் நடித்துள்ளார்) “அரசியல்” “திரையில்” மட்டுமல்ல “தேர்தல் சின்னமாகவும்” ‘நட்சத்திரமே’ வேண்டும் என நீதிமன்றம் சென்று அச்சின்னத்தை பெற்று போட்டியிட்டு வென்ற வி.சி.கவின் அண்ணன் தொல்.திருமா, என தமிழக தேர்தல் களத்தில் ஒரே ‘நட்சத்திர’ போட்டி
தோழர் ராஜீவ் காந்திக்காக (இவரு ஈழ ஆதரவு வழக்கறிஞருங்க) ஆதரவாக பிரச்சாரம் செய்து சீமான், பாரதிராஜா, செல்வமணி, அறிவுமதி போன்றோர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட ‘நிஜ சண்டைக்காட்சிகள்…’ இறுதியாய் காங்கிரஸ் தோற்று… பின் பாரதிராஜாவின் பலகோடி ரூபாய் ஸ்டியோ தாக்கப்பட்டது (பெரும்பான்மை மனித உரிமையாளர்கள் மவுனம் காத்தனர். இப்படியாக தேர்தல் காட்சிகள் … தமிழ்சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளை தோற்கடித்தன.

மூத்த திரைத்துறையினரான தி.மு.க , அ.தி.மு.க தலைமைகளின் பிரச்சார உத்திகள் ஏனோ இத்தேர்தலில் பெரிய தாக்கத்தையும் வெற்றியையும் ஏற்படுத்தவில்லை. தி.மு.க வின் உண்மையான ஸ்டார் பேச்சாளராக வலம் வந்த மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தமிழக வாக்காளர்கள் ரசித்ததையும் பெரும் வாக்குகள் அளித்ததையும் புதிய நம்பிக்கையாக கருத இடமுண்டு. (அவர் நடித்த குறிஞ்சிமலர் தொடர், ஒரே ரத்தம், தூக்குமேடை படங்களை கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்புமா?).

இவ்வாறாக தமிழக அரசியல் அதிகாரத்தை பெற ஊடகமாகக் கருதப்படும் தமிழ் சினிமாவை … தமிழர் வாழ்வு எது? சினிமா எது? என பிரித்தறிய முடியாத வகையில் தமிழனின் இரத்தமும், சதையுமாய் ஏன் மூச்சுகாற்றாய் மாறிவிட்ட ஊடக வரலாற்றின் மறக்கப்பட்ட பக்கங்களின் வரலாற்றுத் துளிகள் சில் இவ்வலைப்பூவில் இடம் பெறுகின்றன. தொல் தமிழகத்தில் தலைமைகளுக்கு ‘நவகண்டம்’ கொடுப்பது தொடக்கம் தற்கால அரசியல் தலைமைகளுக்காக தீக்குளிப்பது வரை தமிழர்களின் தற்கொலை மனோபாவம் தொடர்கிறது. ‘ தமிழர்களின் தலைமைப்பண்பை’ (வளர்க்கும் தமிழ்சினிமாவின் உளவியலை யாராவது அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்வது தமிழர்களை மானமும், அறிவியல் பார்வை கொண்ட தமிழர்களாக வேண்டும் என கனவு கண்ட பெரியாருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும் .. பெரியார் படத்தை பனியனில் போட்டு அலைவதை விட...

No comments:

Post a Comment