Wednesday, December 15, 2010

திராவிட சினிமா நூல் குறித்த யமுனா ராஜேந்திரனின் அவதூறுகள்...


திராவிட சினிமா என்ற திராவிட இயக்க திரை ஆவணத்தை நானும் வீ.எம்.எஸ்.சுபகுணராஜ்னும் தொகுத்து கடந்த 2009 அக்டோபர் மாதம் கயல் கவின் பதிப்பகம் வெளியிடாக வெளியிட்டிருந்தோம். இந்த நூலை வெளியிடுவதற்கான நோக்கத்தை ”திராவிட இயக்கத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுவதற்கு தியோடர் பாஸ்கரனின் சித்திரம் பேசுதடி தொகுப்பு காரணமாக அமைந்தது.திராவிட இயக்கத்தின் திரைப்பட முன்னெடுப்புக்களைத் திட்டமிட்டு மறைத்த அடாத செயலை அறிவுப்பூர்வமாக முறியடிக்கவே இந்நூலைத் தொகுக்க முனைந்தோம்.” என குறிப்பிட்டிருந்தோம். திராவிட இயக்க முன்னோடி ஏ.வி.பி.ஆசைதம்பி நடத்திய திரைப்பட வார இதழின் பெயரான திராவிட சினிமா என்ற பெயரையே இந்த நூலின் தலைப்பாக தேர்ந்தெடுத்தோம். இந் நூலில் செல்லூலாய்டும் திராவிட இயக்கமும் ; சில குறிப்புக்கள் என்ற தலைப்பில் நானும், பேசப்படாத சித்திரங்கள் என்ற தலைப்பில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜனும் பதிப்புரைகள் எழுதியிருந்தோம். மாரக்சிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் இந்த நூலை ” புதியப் பார்ப்பன விமரசனக்கண்ணாடி” கொண்டு அணுகியுள்ளார். இந்த அவதூறு விமர்சனம் டிசம்பர் 2010 உயிர்மை இதழில் வெளிவந்துள்ளது.
திராவிட இயக்கத்தின் திரை சாதனையை அறிய விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய தோழர் மதிமாறனின் பதிவு

http://mathimaran.wordpress.com/2010/01/04/artical-268/

1 comment: